Main Menu

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி நகர் முதலிடத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகர் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நான்காவது இடத்தில் டெல்லி இடம்பெற்றுள்ளது.

மிகவும் காற்று மாசடைந்த 63 இந்திய நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம் மற்றும் அரியானாவில் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர மற்ற அனைத்து மெட்ரோ நகரங்களிலும் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...