Main Menu

உலகளவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கிக் கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன.

அவைகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதே போல் தடுப்பு மருந்துகளை மற்ற நாடுகளும் வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பை தடுப்பதில் தடுப்பு மருந்து முக்கிய பங்காற்றும் என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு மத்தியில் இருந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ்

இதற்கிடையே உலகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. 207 நாடுகளில் 100 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 540 டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா 20 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தது. தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 14.70 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12. 50 கோடி பேர் குணமடைந்து உள்ளனர். 18 லட்சம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 31.12 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

பகிரவும்...