Main Menu

உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு

கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுநோயால் 2020ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 13 முதல் 32 வீதம் வரை, அதாவது மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறிய ரொபேர்டோ, இதனால் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி குறையும் என்றும், பல நாடுகளின் அந்நியச் செலாவணியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...