Main Menu

ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்! – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானகவே இரத்தாகி விடும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இலங்கை தமிழர்கள் குறித்து 50 முறை அழுத்தம் பிரயோகித்து வருகிறோம். அவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

எங்களைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழர்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுயமரியாதையுடன் வாழவேண்டும்.  அத்துடன் இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும். இலங்கை தமிழர்களின் நோக்கமும் அதுவாகவே காணப்படுகின்றது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கலாம் என கூறிவருகிறார். இலங்கை குடியுரிமை சடத்தின் கீழ், 21ஆவது பிரிவின்படி, இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்றால் அந்நாட்டு குடியுரிமை தானாகவே இரத்து செய்யப்படும்.

ஆகவே இந்த சட்டங்கள் குறித்து அறியாமல் ஸ்டாலின் ஏதேதோ பேசிவருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...