Main Menu

பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

உல​கத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறனின் மகன் மாணிக்கம் நெடு​மாறன் (வயது 57) ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நேற்று கால​மா​னார்.

இளம் வயதிலேயே புத்த மதத்தை தழுவி புத்த துற​வி​யாக வாழ்ந்து வந்த அவர், புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்​றி, இந்​திய நேரப்​படி நேற்று காலை 8.45 மணிக்கு கால​மா​னார்.

அவரது இறு​திச்​சடங்​கு​ புத்த மதப்​படி மெல்​பர்ன் நகரில் நடை​பெறுகிறது. பழ.நெடு​மாறனின் பாஸ்​போர்ட் முடக்​கப்​பட்​டிருப்​ப​தால் அவரும், அவரது மனை​வி​யும் மகனின் இறு​திச்சடங்​கில் பங்​கேற்க இயல​வில்லை என உலகத் தமிழர் பேரமைப்பு தெரி​வித்​துள்​ளது.