Main Menu

ஈரானுடன் போர் வேண்டாம்! – நியூயோர்க்கில் ட்ரம்ப்புக்கு எதிராக மிகப்பெரிய பேரணி!

ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையில் எந்நேரமும் போர்வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனிதனுக்கு இன்றைய தேவை வேலைகள், சுகாதாரம், கல்வி போன்றவையே தவிர முடிவற்ற போர் அல்லவென நேற்று (சனிக்கிழமை) போர் எதிர்ப்பாளர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘நீதி இல்லை, அமைதி இல்லை. மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறு! ஈரானுடன் போர் வேண்டாம்’ போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் எந்தியிருந்தனர்.

மேலும், முடிவற்ற போர் வேண்டாம் எனவும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் வேண்டாம் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நியூயோர்க் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ​​நியூயோர்க் பொலிஸ் ஆணையாளர் டெர்மோட் ஷியா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...