Main Menu

2020இல் மக்ரோன் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான ஐந்து பெரும் சவால்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாண்டில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி செய்ய வேண்டியவைகளில் மிகமுக்கியமாக ஐந்து சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ஓய்வூதிய சீர்திருத்தம்

பிரான்சில் கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் வெகுஜனப் போக்குவரத்து வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வேலைநிறுத்தங்கள் இம்பெறுகின்ற நிலையில் இந்தப் பிரச்சினை மக்ரோனுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, தனது ஓய்வூதிய சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் தீவிரமாக இருப்பது பிரான்ஸை நவீனமயமாக்கும் தனது திட்டத்தின் முக்கிய அம்சம் எனக் கருதுகிறார்.

இந்த சூழலில் அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 7ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் இப்பிரச்சினையைத் தீர்க்க மக்ரோன் கடும் மயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

2. நகராட்சி தேர்தல்கள்

பிரான்சில் இவ்வாண்டில் ஜனாதிபதியை நேரடியாக ஈடுபடுத்தாத ஆனால் செல்வாக்குச் செலுத்தும் உள்ளூர் தேர்தலாக நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு மக்கள் தங்கள் உள்ளூர் மேயர்களையும் சபைகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். எவ்வாறாயினும், மக்ரோனின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், அவரது கட்சியான La République en Marche (LREM) வெற்றி அல்லது இல்லையெனில் ஜனாதிபதி எவ்வளவு பிரபலமானவர் அல்லது உண்மையில் செல்வாக்கற்றவர் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகக் கருதப்படும்.

LREM கட்சிக்கு இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையாகும், இது ஒப்பீட்டளவில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியாக வலுவான உள்ளூர் அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கம்யூன்களில் உள்ளூர் மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

3. பயோஎதிக்ஸ் சட்டவரைபு

ஒற்றைப் பெண்கள் மற்றும் லெஸ்பியன் தம்பதிகளுக்கு ஐ.வி.எஃப். (IVF) சிகிச்சையை விரிவுபடுத்தும் ஒரு சட்டவரைபு பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் 2019இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜனவரியில் அது செனட் சபைக்கு வருகின்றது. எனினும் இது மிகவும் சமூக பழமைவாதமாக இருக்கும்.

பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகள் இருந்தபோதிலும், இந்த சட்டவரைபு மத மற்றும் சமூக பழமைவாத குழுக்களின் எதிர்ப்புகளால் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

4. வயதானவர்களுக்கு நிதி பாதுகாப்பு

வறுமையில் வாடும் வயதானவர்களின் பிரச்சினை தொடர்பாக 2019இல் தெரிவிப்பதாக மக்ரோன் உறுதியளித்தார். ஆனால் பின்னர் அவரது சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தங்கள் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாகவும் மக்ரோன் எதிராக கருத்துக்கள் முன்னைக்கப்படுவதால் இதற்கான தற்காலிக அல்லது நிரந்தர தீர்வினை இவ்வாண்டில் முன்வைக்க வேண்டும்.

5. பொது ஒளிபரப்பு சீர்திருத்தம்

பொது ஒளிபரப்பு சீர்திருத்தம் வரும் பெப்ரவரியில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் விவாதிக்கப்பட வேண்டியதாகும். இது அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை மேற்பார்வையிட ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்கும் யோசனையாகும். எனினும் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை விவாதத்தின்போது சர்ச்சையை ஏற்படுத்தலாம்.

எனவே, இவ்வாறு மக்ரோன் முன் பல்வேறு சவால்கள் உள்ளபோதும், எப்போதுமே தன்னை ஒரு புரட்சியாளர் என அவர் காட்டிக் கொள்ளவில்லை. மேலும் குறித்த அந்தஸ்தைப் பேணுவதில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

எனினும் அவர் மிகவும் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும் அவர் முன்னுள்ள பெரும் பிரச்சினைகளுக்கு மக்ரோன் தீர்வினைக் கண்டுவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...