Main Menu

இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிப்பு!

இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு நடத்திய தொடர் அகழ்வாராய்ச்சியில் 6ஆம் நூற்றாண்டில் வீரமரணமடைந்த ஒருவரின் நினைவாக கட்டப்பட்ட அழகிய தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொசைக் கற்களை பயன்படுத்தி பறவைகள், பழங்கள் மற்றும் மரங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த அந்த ஆலயத்தினுள், வீரமரணமடைந்தவரின் சடலம் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...