Main Menu

இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது!

இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் இரு முக்கிய கட்சிகளும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியதால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களில் 2-வது முறையாக நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 92 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் இராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் ‘லிகுட்’ கட்சியும், பென்னி கன்ட்சின் ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சியும் தலா 32 இடங்களில் வெற்றி பெற்றன.

இதனால் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் புதிய அரசாங்கத்தினை அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பெய்டனு கட்சிதான் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

இருகட்சிகளுக்குமே பெரும்பான்மை இல்லாததால் பெய்டனு கட்சியின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

எனவே அக்கட்சியின் ஆதரவை பெற பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் பென்னி கன்ட்ஸ் ஆகிய இருவருமே தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, ‘ஒரு வலுவான அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டேன்’ என கூறியுள்ளார்.

பகிரவும்...