Main Menu

இஸ்ரேலின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலின் புதிய பிரதமர் பென்னெட்டிக்கு ருவிட்டர் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னெட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

மேலும்  தூதரக உறவை நாம் புதுப்பித்து  எதிர்வரும் ஆண்டுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளோம். இந்த நிலையில் உங்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த நான் ஆர்வமாக இருக்கின்றேன்” என ருவிட்டரில் மோடி பதிவேற்றியுள்ளார்.

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் யேஷ் அதித் கட்சி தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில், ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இந்த கூட்டணி ஆட்சியின் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னெட் இன்று பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...