Main Menu

இலங்கையில் நீதியை உறுதிப்படுத்த பிரிட்டன் அதிக கரிசனை: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிப்பு

இலங்கையில் சமத்துவம், உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையை தமிழர்களுடன் இணைந்து கொண்டாடிய பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரிட்டனுக்கு தமிழ்ச் சமூகம் வழங்கும் ஆதரவு மிகப்பெரியது. எனவே, அவர்கள் எம்முடன் இரண்டறக் கலந்தவர்கள். ஆனால், தமிழர்களின் பலரின் வரலாறு துயரமும் வேதனையும் நிறைந்தது என்பது எனக்குத் தெரியும். ஆதலால், பிரிட்டனை நீங்கள் (தமிழர்கள்) உங்களின் இல்லமாக எண்ண வேண்டும்.

பொங்கற் பானையைப் போலவே தமிழ் சமூகத்தின் செழிமையும் பெருந்தன்மையும் நிரம்பிவழிகின்றது. நாடு முழுவதும் ஒளிளையும் நம்பிக்கையையும் கொண்டுவருகின்றது. இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டன் அக்கறையுடன் உள்ளது. அதை மீள வலியுறுத்துகின்றேன் – என்றார்.

பகிரவும்...
0Shares