Main Menu

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த உயிரிழப்புக்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கொழும்பு – 2 பகுதியைச் சேர்ந்த ஆண்ணொருவரும் (46 வயது), கொழும்பு – 4 பகுதியைச் சேர்ந்த  ஆண்ணொருவரும் (63 வயது), குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆண்ணொருவரும் (65 வயது) ரத்கம பகுதியைச் சேர்ந்த  ஆண்ணொருவரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு இலட்சத்து 517ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதுடன் இன்னும் ஐயாயிரத்து 724 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை களுத்துறை- தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட பிரதேசம், நேற்று  மாலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 5 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...