Main Menu

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே, அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரை மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசினார்.

அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியதை எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்தார். எனவே தமது கோரிக்கையை பரிசீலிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமித்ஷா, இப்பிரச்சனை குறித்து விரைவில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் இதற்குரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உறுதி அளித்தார்.  தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார். 

பகிரவும்...