Main Menu

இராமேஸ்வரத்தில் திடீரென நிறம் மாறிய கடல்

இராமேஸ்வரம் பகுதிக்கு அருகே உள்ள மன்னார் வளைக்குடா பகுதியில் கடல்நீர் நிறம் மாறியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி குறித்த கடலின் நிறமானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த கடற்பரப்பில் சுனாமி தாக்கத்திற்கு பின்னரும், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாகவும் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த கடற்பரப்பில் இறந்த மீன்கள் அதிகளவாக கரையொதுங்குவதாகவும், இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிகழ்வு இந்த பகுதியில் நிழந்ததே இல்லை எனக் குறிப்பிடும் மக்கள், இது குறித்து இராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குனர் காத்தவராயனிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடலில் நிறம் மாறுவது குறித்தும், அரியவகை மீன்கள் பல இறந்த நிலையில் கரையொதுங்குவது குறித்தும் CMFRI என்ற அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...