Main Menu

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.

சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முன்னைய சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார  நடைமுறைகளையே பின்பற்றுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது .

இதேவேளை மேற்கு மாகாணத்திலும் முன்பள்ளிகள் மற்றும் தனியார் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது.

அதேபோன்று பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் துணை வேந்தர்கள் அனைவருடன் கலந்துரையாடல் ஒன்றினை இன்று நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

மேலும்  சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...