Main Menu

இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக வணக்கமாக பிரார்த்திக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிளலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இக்காட்டான ஒரு சூழலில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம். உலகமே அதிர்ந்து போயிருக்கின்ற கொரோனா என்கின்ற கொடிய நோயிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவ சமூகமும் இலங்கை அரசாங்கமும் மற்றும் உலக அளவிலே மனிதத்துவத்தை பாதுகாக்கின்ற அமைப்புக்கள் யாவும் விடுத்த ஒன்றுதான் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளிலேயே தங்கவைக்கின்ற ஒரு ஏற்பாடாகும்.

இந்தச் சூழலில், புத்தாண்டைக் கொண்டாடும் மக்கள் அனைவரும் கோயில்களுக்கோ அல்லது உறவினர்கள் வீடுகளுக்கோ செல்லவென வெளியில் வராதீர்கள்! நாம் கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு முறையிலேயே எமது மக்களின் வாழ்வு தங்கியிருக்கிறது.

உண்மையிலேயே, எங்கள் மண்ணிலே ஏற்படுத்தப்பட் சில சட்டதிட்டங்களும் மருத்துவ துறைசார்ந்தவர்களின் அறைகூவலும் எவ்வளவோ வெற்றியைத் தந்திருக்கிறது. எனவே, நாளை எமது சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

எனவே, இந்தப் புதுவருடம் கொண்டாட வேண்டிய காலமல்ல. இந்தப் பண்டிகையை வணங்குகின்ற காலம். அகவணக்கமாக பிரார்த்திக்கின்ற காலமே இதுவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...