Main Menu

டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என அறிவித்தது.

பெரும்பாலான நாடுகள் அது கருத்தை வலியுறுத்தின. இதனால் ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பானில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் கூட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்பதை உறுதியாக கூற இயலாது என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சி.ஒ.ஓ தோசிரோ முடோ இதுகுறித்து கூறுகையில்

‘‘கொரோனா வைரஸ் தொற்றை அடுத்த வருடம் ஜூலை மாத்திற்குள் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வந்திட முடியும் என்று யாரும் உறுதியாக சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு உறுதியான நிலையில் இருந்து தெளிவான பதிலை எங்களால் கொடுக்க முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு போட்டியை ஒத்தி வைத்துள்ளோம். ஆகவே, அடுத்த வருடம் போட்டி நடைபெறுவதற்கான வேலைகளை கடுமையான வகையில் செய்ய முடியும். அடுத்த வருடத்திற்குள் இந்த கொடிய வைரசை மனித இனம் வெற்றிக் கொள்ளும் என நம்புகிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...