Main Menu

இந்தியா முழுவதுமுள்ள இராணுவ கடைகளில் வெளிநாட்டுப் பொருட்களுக்குத் தடை!

இந்தியா முழுவதும் உள்ள இராணுவ கடைகளில் (Canteen) வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டுத் தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “இராணுவ கடைகளுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் எதுவும் இனி நேரடியாகக் கொள்முதல் செய்யப்படக் கூடாது.

உள்நாட்டுத் தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் நான்காயிரம் இராணுவ கடைகள் செயற்பட்டு வருகின்றன.

குறித்த கடைகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் இவற்றில் சுமார் 400 இறக்குமதிப் பொருட்கள் காணப்படுவதாகவும் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் தயாரிப்புக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...