Main Menu

இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தகவல்!

இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2017 ஆம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 39 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2 ஆம் இடத்திலும், தமிழ்நாடு 3 ஆம் இடத்திலும் உள்ளன.

அத்தோடு, 2018 ஆம் ஆண்டில், குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் 44.2 வீதமும், ‘போக்சோ’ சட்டத்தில் பதிவான சம்பவங்கள் 34.7 வீதமும் நடந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும், காப்பகங்களில் வளரும் பெண்கள் மற்றும் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...