Main Menu

இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 200 புத்தகங்களில் வானியலாளர் கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா ஆகியோரின் படைப்புகளும் உள்ளடங்குகின்றன.

இந்தப் புத்தகங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கு லண்டனின் ஃபெல்டாமில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டதுடன் லாஸ் வேகாஸுக்கு ஏலத்திற்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்வுடைவர்கள் ருமேனிய மாஃபியா குழுவான கிளாம்பருவின் ஒரு பிரிவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இங்கிலாந்து முழுவதும் இடம்பெற்ற சுரங்க கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளைச் சம்பவங்களை திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...