Main Menu

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டுப்பாடுகளில் தளர்வு என்ற அறிவிப்பு நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 23 அன்று அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தல் அவசியம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை நாட்டுக்கு அனுமதிக்கும் சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்க்கும் நேரம் இது என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கடுமையான விமர்சனங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக நாளை முதல் வீடுகள், பப்கள் மற்றும் உணவகங்களில் ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்படவுள்ள நிலையில் ஜூன் 21 அன்று மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தும் முடிவினை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமையன்று, இங்கிலாந்தில் இந்திய மாறுபாட்டின் புதிய மாறுபாடு உடைய 1,313 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் இது கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்றும் பொது சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இது சில மாதங்களாக இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தும் கென்ட் மாறுபாட்டை விட இந்த மாறுபாடு 50% அதிகமாக பரவக்கூடியதாக கருதப்படுகிறது.

பகிரவும்...