Main Menu

ஆபிரிக்காவை உலுக்கும் கொரோனா – தீவிரமான மற்றும் துணிவான நடவடிக்கைகளை கோரும் ஆபிரிக்க ஒன்றியம்

ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான மற்றும் துணிவான முன்னெடுப்புகள் அவசியம் என ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ள நிலையில் குறித்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான தன்சானியாவில் கொரோனா பரிசோதனைகள் மந்தகதியில் இடம்பெற்று வரும் நிலையில், ஆபிரிக்க ஒன்றியத்தால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், ஆபிரிக்காவில் நிலவும் மந்தகதியான பரிசோதனை நிலையானது ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் எவ்வளவு தூரம் அதிகரித்துள்ளது என்பதற்கான உண்மை நிலையை மறைக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10 லட்சத்து 39 ஆயிரத்து 678 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆயிரத்து 966 பேர் குறித்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...