Main Menu

உலக சுகாதார அமைப்பின் சீர்திருத்த விவாதங்களிலிருந்து ஜேர்மனியும் பிரான்சும் விலகல்?

உலக சுகாதார அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து பிரான்சும் ஜேர்மனியும் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்த போதிலும் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்குவதால் ஏற்பட்ட பதற்றத்திற்கு இடையே இரு நாடுகளும் கலந்துரையாடல்களில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செப்டம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பை மாற்றியமைப்பதற்கான ஒரு வரைபடத்தை வெளியிட விரும்பினார் என்று செய்தி சேவை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, சீனாவுடன் மிக நெருக்கமாக பணியாற்றியது மற்றும் கொரோனா வைரஸ் நெருக்கடியை தவறாக நிர்வகித்தது என்று ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை விடுத்ததால், ஜூலை மாதம் அமெரிக்கா அந்த அமைப்பை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.

ஐரோப்பிய அரசாங்கங்களும் உலக சுகாதார அமைப்பை விமர்சித்தன. ஆனால் ட்ரம்ப்பின் அளவிற்கு அல்ல என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பகிரவும்...