Main Menu

அவசரகால சட்ட விதிகளை மேலும் நீடிக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் இடம்பெறாது

அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.  மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சிறியளவில் அச்சம் காணப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனாலேயே அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது. தற்பொழுது ஒரு மாதம் காலத்தற்கு மாத்திரமே நீடிக்கப்படுகின்றது. மீண்டும் இதனை நீடிக்க வேண்டிய தேவை ஏற்படாது என்று விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

மத ரீதியில் முன்னெடுக்கும் இந்த பயங்கரவாதம் தனியொருவராலும் நடத்தப்படலாமென அமைச்சர் குறிப்பிட்டார். தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் ரில்வானுக்கு பின்னர் அவ்வமைப்பை வழிநடத்துவதற்கு இருந்த நௌவ்பரையும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட்டோம். ஆகையால் அணியாக செயற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

குண்டு தயாரிக்க இருந்தவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இருப்பினும் சஹ்ரானின் சகாக்கள் மற்றும் அவருக்கு உதவி செய்தவர்களையும் நாம் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...