Main Menu

கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ

பாரம்­ப­ரி­ய­மாக வடக்கு, கிழக்கு, மலை­ய­கப் ­ப­கு­தி­க­ளி­லி­ருந்து வரு­டாந்தம் கதிர்­கா­மத்­திற்கு மேற்­கொ­ள்­ளப்­பட்­டு­வரும் பாத­யாத்­தி­ரை அர­ச­ அங்­கீ­கா­ரத்­துடன் தேசிய புனித யாத்­தி­ரை­யாக பிரகடனப்படுத்தப்படும் என்று  தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்­னேற்ற இந்து சமய அலு­வல்கள் அமைச்­சரும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார்.

 நாட்டில் தமி­ழர்கள் தங்­களின் இருப்பை நிலைநிறுத்­து­வ­தோடு சகோ­தர இன, மத மக்­களை அர­வ­ணைக்க வேண்டும். அப்­போ­துதான் சமூக நல்­லி­ணக்­கத்­தினை பாது­காத்துக் கொண்டு தமிழ் மக்­களின் இருப்பை உறு­தி­ப்ப­டுத்­த­மு­டியும் என்றும் அவர் கூறினார்.

அம்­பாறை உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆல­யத்­திற்­கான பிர­தான வீதி நுழைவாயில் கோபு­ரத்­தினை நேற்று வியா­ழக்­கிழமை காலை திறந்து வைத்து உரை­யாற்றும் போதே  அவர் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது தெரி­வித்­த­தா­வது,

தமி­ழர்கள் தங்­களில் இருப்பை நிலை நிறுத்திக் கொள்­வ­தற்­காக பல போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். நாம் நமது இருப்பை பாது­காத்துக் கொள்­வ­தற்கு போரா­டு­கின்ற அதே நேரம் இந்த நாட்டில் உள்ள சகோ­தர இன, மத மக்­க­ளையும் அனு­ச­ரித்து செல்ல வேண்டும்.

இன்று நாட்டில் நிதா­ன­மா­கவும் முதிர்ச்­சி­யு­டனும் தமி­ழர்­களின் இருப்பை நிலை நிறுத்தி வரு­கின்றோம். ஒரு புறத்தில் தமி­ழர்­களின் இருப்பை நிலை நிறுத்­து­வ­தோடு சகோ­தர இனத்­த­வர்­களின் அன்­பையும் ஆத­ர­வையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இது சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றார்.

ஒன்று முந்தி மற்­றொன்று பிந்­தியும் இடம்­பெ­று­மானால் சகோ­தர இன, மத மக்­களின் எதிர்ப்பை எதிர்கொள்­­வ­தோடு நாம் காணாமல் போய்­வி­டுவோம். எனவே  தமி­ழர்­களின் இருப்­பையும் சகோ­தர இன மக்­களின் அர­வ­ணைப்­பையும் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

இந்­நி­கழ்வில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார், அம்­பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் மற்றும் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் டி.எம்.எல்.பண்­டா­ர­நா­யக்கா ஆகி­யோரும் உரை­யாற்­றினர்.

இதனைத் தொடர்ந்து கிழக்­கி­லங்கை வர­லாற்று சிறப்­பு­மிகு உகந்தை ஸ்ரீமுருகன் ஆல­யத்­திற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வ­ரனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன்,  ஆல­யத்­திற்­கான பிர­தான வீதி நுழைவாயிலை­ திறந்து வைத்­த­துடன் கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கான குமண காட்டுவழிப் பாதையையும் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பகிரவும்...