Main Menu

அமேசன் காடுகள் 50 ஆண்டுகளில் பாலைவனமாகி விடக்கூடும் என எச்சரிக்கை!

உலகின் ஆக அதிகமான விலங்கினங்களையும் செடி வகைகளையும் கொண்ட இடங்களில் ஒன்றான அமேசன் காடுகள், உலக வெப்பமயமாதலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது.

இதன்காரணமாக அமேசன் காடுகள் சுமார் 50 ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் அதிக விலங்கினங்களையும் செடி வகைகளையும் கொண்ட மற்றுமொரு இடமான கரீபியன் பவளப் பாறைகளும் 15 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அழிந்துவிடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை அழிந்துவிடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமேசன் வனப்பகுதி, காடுகளை அழிப்பதால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நீரை அசுத்தப்படுத்துவது, காற்றிலுள்ள கரியமில வாயு கடல் நீரில் கலப்பது போன்றவற்றால் பவளப்பாறைகள் அழிவடைந்து வருகின்றன.

இதனால் மனித இனமும் மற்ற உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமேசன் காடுகளில் 35 சத வீதமானவை அழிந்தால் அது முற்றிலுமாக அழியும் நிலை ஆரம்பமாகி விடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

7 நாடுகளில் பரவிக் கிடக்கும் அமேசன் காடுகளின் 20 சதவீதமானவை ஏற்கனவே அழிவடைந்து விட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...