Main Menu

வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப் படுத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்!

ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அனுமதி மறுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.

நாளை முதல் நாடு திரும்பும் மலேசிய பிரஜைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து வருகை தரும் வணிக விமானங்களுக்கு குவைத் அரசாங்கம் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளது.

அத்துடன், நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 29ஆம் திகதி முதல் தொழில் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என குவைத் அறிவித்துள்ளது.

இதேவேளை, தொற்று ஏற்பட்டுள்ள 11 நாடுகளிலுருந்து வருகை தரும் விமானங்களுக்கு லெபனான் தடை விதித்துள்ளது.

இதுவரை 118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸினால் 121,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 4 ஆயிரத்து 380 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...