Main Menu

அரசியல் பிரவேசம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார்.

இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ஆம் திகதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு திருப்தியில்லை, ஏமாற்றம் தான் என கூறியிருந்தார்.

பகிரவும்...