Main Menu

அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்து விட்டனர் – சீன அதிகாரி விமர்சனம்

சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்துவிட்டதாக சீனா விமர்சித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

 சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இந்த விமர்சத்தினை முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்கா சீனா இடையேயான உறவில் இதுவரை இல்லாத வகையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் வர்த்தகம் மற்றும் பிரஜைகளுக்கான விசா கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப சக்தியான அமெரிக்காவை எதிர்கொள்ளவோ அல்லது மாற்றவோ சீனா முயலவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதுமே சீன அரசாங்கத்தின் இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட அரசாக, சீனா தனது சொந்த இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கவும், சீன மக்கள் கடின உழைப்பால் செய்த சாதனைகளைப் பாதுகாக்கவும், சீனாவுக்கு எதிரான அநீதி மற்றும் தீங்கிழைக்கும் நாடுகளுக்கு எதிராக போராடவும் தங்களுக்கு உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.

பகிரவும்...