Main Menu

அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!

மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.

தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் தடை விதித்தது.

எனினும், ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா ஏவுகணைகளை சோதனை செய்வதாக குற்றம்சுமத்தி வந்த அமெரிக்கா, கடந்த ஆகஸ்டில் இந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

இதனை தொடர்ந்து கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப் படை தளத்தில், தரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் பறந்த பிறகு, கடலில் விழுமாறு செய்யப்பட்டதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கார்வர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...