Main Menu

அமெரிக்காவில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் பாதிக்கபட்டடோரின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலகம் முழுவதும் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 82 ஆயிரத்து 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 35 இலட்சத்து 63 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட நேற்று மட்டும் 3 ஆயிரத்து 481 பேர் உலக நாடுகளில் மரணித்துள்ளனர் நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 2 ஆயிரம் குறைவு என்பதுடன் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 48 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட 35 இலட்சத்து 63 ஆயிரம் பேரில் இதுவரை 11 இலட்சத்து 53 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் அதிக பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 71 இலட்சத்து 96 ஆயிரத்து 740 பேரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 11 இலட்சத்து 88 ஆயிரத்து 122 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 27 ஆயிரத்து 348 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 154 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 68 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளன. கடந்த நாட்களை விட அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

வைரஸ் பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நேற்றுமட்டும் 280 பேர் மரணித்துள்ளதுடன் இதுவரை 24 ஆயிரத்து 648 பேர் மரணித்துள்ளதுடன் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 883 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாநிலமான நியூ ஜெர்ஸியில் நேற்றுமட்டும் 158 பேர் மரணித்துள்ளதுடன் மாசசூசெட்ஸ் பகுதியில் 158 பேரும் பென்சில்வேனியாவில் 56 பேரும் மிச்சிகன் மாகாணத்தில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு நியூ ஜெர்ஸியில் 7 ஆயிரத்து 886 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 27 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நேற்றுமட்டும் 275 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 7ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளன. அத்தோடு நேற்று மட்டும் கொரோனா வைரஸ் நோயாளிகளாக 4 ஆயிரத்து 588 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1 இலட்சத்து ஆயிரத்து 147 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் பெரும் மனித இழப்பை ஏற்படுத்திவருகின்ற வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் சற்றுக் குறைந்துள்ள போதும் பிரித்தானியா மற்றும் இத்தாலியில் நேற்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ஐரோப்பிய கண்டத்தில் நேற்று 25 ஆயிரத்து 116 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 14 இலட்சத்து 47 ஆயிரத்து 503 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று மட்டும் ஆயிரத்து 193 பேர் மரணமடைந்துள்ளதுடன் மொத்தமாக 1 இலட்சத்து 40 ஆயிரத்து 603 பேர் மரணமடைந்துள்ளார். அத்தோடு இதுவரை 5 இலட்சத்து 40 ஆயிரத்து 691 பேர் குணமடைந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கடுமையான பாதிப்புக்கு இலக்காகியுள்ள இத்தாலியில் கடந்த சில நாட்களைவிட நேற்று உயிரிழப்பு குறைந்துள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் 174 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்கள் 28 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளன. மொத்த பாதிப்பு இதுவரை 2 இலட்சத்து 10 ஆயிரத்து 717 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று மட்டும் 164 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 25 ஆயிரத்து 264 ஆகப் பதிவாகியுள்ளன. அதேவேளை அங்கு நேற்று ஆயிரத்து 533 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 இலட்சத்து 47 ஆயிரத்து 122 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவந்த பிரான்ஸில் மரணங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கும் பின்னர் அந்நாட்டில் உயிரிழப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

அந்தவகையில், பிரான்சில் நேற்று 135 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று புதிய தொற்றாளர்கள் 297 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட பிரித்தானியாவில் சற்றுக் குறைந்திருந்த உயிரிழப்புக்கள் மீண்டும் கடந்த 3 நாட்களாக அதிகரித்திருந்த நிலையில் நிலையில் நேற்று ஒரேநாளில் 315 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளது.

அங்கு மொத்தமாக 28 ஆயிரத்து 446பேர் இதுவரை மரணித்துள்ள நிலையில் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நாடுகளில் 3 ஆவது இடத்தில் பிரித்தானியா உள்ளது. மேலும் அங்கு 4 ஆயிரத்து 339 பேர் நோயாளிகளாக நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 599 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், ஜேர்மனியில் இதுவரை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்புக்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நாடாக உள்ள ஜேர்மனியில் நேற்று 54 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 6 ஆயிரத்து 866 ஆகக் காணப்படுகின்றது.

இதையடுத்து, ரஷ்யாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் இதுவரை இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்து 633 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆசிய நாடுகளில் நேற்று 278 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் அதிகபட்சமாக இந்தியாவில் நேற்றுமட்டும் 68 பேர் மரணித்துள்ளனர். அந்தவகையில் அங்கு மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அந்நாட்டில் 42 ஆயிரத்து 505 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு அதில் 11 ஆயிரத்து 775 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு துருக்கியில் 61 பேரும் ஈரானில் 47 பேரும் பாகிஸ்தானில் 20 பேரும் இந்தோனேஷியாவில் 14 பேரும் ஜப்பானில் 13 பேரும் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆசிய நாடுகளில் இதுவரை 19 ஆயிரத்து 617 பேர் மரணித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 992 பேர் நேற்று மட்டும் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 இலட்சத்து 58 ஆயிரத்து 802 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 2 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் எந்த உயிரிழப்புக்களும் அங்கு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...