Main Menu

அமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை

அமெரிக்காவில் ‘2019 டீன் ஜியோபார்டி’ என்ற தலைப்பில் தனிநபர் டி.வி. வினாடி-வினா போட்டி நடந்தது. ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த போட்டி டி.வி.யில் ஒளிபரப்பாகி, அங்கு பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு நடந்த போட்டியில், இந்திய வம்சாவளி மாணவர் அவி குப்தா வெற்றி பெற்றார். இவருக்கு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.70 லட்சம்) ரொக்க பரிசு கிடைத்தது. இந்த மாணவர், அங்கு ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

3 இந்திய வம்சாவளி மாணவர்களுடன் போட்டியிட்டு, இந்த வெற்றியை அவி குப்தா அடைந்துள்ளார். இதுபற்றி அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகையில், “இது உண்மைதானா என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த வாய்ப்பினை நான் பெற்றதற்கு எவ்வளவு நன்றிக்கடன் உள்ளவனாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை என்னால் வெளிப்படுத்தி விட முடியாது” என கூறினார்.

அவி குப்தாவின் தாயார் நந்திதா குப்தா, “ஒரு தாயாக என் இதயம் 100 மைல் வேகத்தில் துடிக்கிறது. இதற்காக என் மகன் வருடம் முழுவதும் முயற்சி எடுத்து வந்தார்” என கூறினார்.

பகிரவும்...