Main Menu

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்

OVID-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் வெகுவாகப் பரவி வருவதால், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர்.

அதற்கான கட்டணமாகச் சுமார் 20,000 டாலர் செலுத்த அவர்கள் முன்வருகின்றனர்.

பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளதால், விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வழக்கமான விமானங்களின் இடைநிறுத்தச் சேவை மூலம், அவர்கள் சுமார் 60 மணி நேரம் பயணம் மேற்கொள்ளவேண்டும்.

பல்வேறு இணைப்பு விமானங்களை எடுத்து, பல நாடுகளைக் கடப்பதற்குப் பதிலாக, தனியார் விமானம் வழி நேரடியாக நாடு திரும்புவதே மேல் என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.

தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதில் பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது.

சீனாவிலோ, அண்மைக்காலமாக யாருக்கும் உள்ளூரில் கிருமி தொற்றவில்லை.

பகிரவும்...