Main Menu

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன.

குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...