Main Menu

அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்தது ‘ரௌடி பேபி’ பாடல்

நடிகர் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலின் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து சர்வதேச அளவில் இப்பாடலின் காணொளிக்கு கவனம் கிடைத்தது.

மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது. ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரௌடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்றது.

இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது.

தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன.

இந்த எண்ணிக்கைகளைச் தாண்டிய ரௌடி பேபி பாடல் தற்போது யூடியூபில் 72 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன காணொளிகளில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளதுரௌடி பேபி பாடல்.

இதேவேளை உலகளவில் அதிகம் பேர் பார்த்த காணொளிளில் ரௌடி பேபிக்கு 7ஆம் இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...