ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத விசாரணைகள் பிரிவில் முன்னிலை..
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத விசாரணைகள் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று காலை 09.45 மணியளவில் அவர் முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மறுநாள் பாசிக்குடா பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்து சவூதி அரேபியா பிரஜைகள் சிலரை சந்தித்தமை மற்றும் முஸ்லிம் பிரஜைகள் 100 பேருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தமை உட்பட 03 சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.