விளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்
விளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்
தருகிறார் – பிரபல ஜோதிடர் மனவள ஆலோசகர் கே. கங்காதரன் அவர்கள்…
—————————
1 ,10 , 19 , 28
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், கடும் சவாலையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் 1 , 10 , 19, 28 பிறந்த திகதியை கொண்ட உங்களுக்கு விளம்பி வருடம் பல நல்ல வாய்ப்புகளை தந்தாலும் இடையிடையே தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தடைகளை கண்டு அஞ்சாதவர்கள் என்பதால் கவலையை விடுத்து தைரியத்துடன் காரியத்தில் ஈடுபடுங்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும். வீண் சஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் பொறுமை அவசியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அதிகளவில் முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும் . குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நட்பு ரீதியில் பொறுமை அவசியம். எண்ணங்களில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனினும் இவ்வருடம் உங்களை பொறுத்தவரையில் உங்கள் முயற்சிக்கு ஏற்ற வகையில் நல்ல வெற்றி தரக்கூடிய நல்ல வருடமாக இருப்பதால் தைரியத்துடன் செயலாற்றுங்கள். வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். பொறுமை நிதானத்தை கடைபிடியுங்கள்.
இறை நம்பிக்கையுடன் செயலாற்றுவீர்களானால் இவ் வருடம் உங்களுக்கு நன்மைகள் தரும் நல்ல வருடமாக அமையும்.
அதிர்ஷ்ட திகதி- 3 , 5
அதிர்ஷ்ட கல் – வைரம்
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பிங்
—————————
2 , 11 , 20 , 29
கற்பனை திறனும், கலை ஞானமும் எடுத்த காரியத்தில் வெற்றி காணும் வரை உழைக்கும் தோற்றம் கொண்ட 2 , 11 , 20 ,29 திகதியில் பிறந்த நேயர்களே இவ் விளம்பி வருடம் பல நல்ல வாய்ப்பை தரும். இருந்து வந்த தடைகள் அகலும். எனினும் பல மாற்றங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வண்டி வாகன யோகம் உண்டு. இட மாற்றங்கள் வெளி நாடு பிரயாணங்கள். புனித யாத்திரைகள் உண்டு. அன்னியோர் உதவியாலும் நன்மைகள் கிடைக்க கூடும். முயற்சிகேற்ற நல்ல வருடமாக அமைகிறது.
அதிர்ஷ்ட திகதி- 2 , 7 , 5
அதிர்ஷ்ட கல் -முத்து
அதிர்ஷ்ட நிறம்-செம்மஞ்சல், வெள்ளை, பச்சை
—————————
3 ,12 ,21 ,30
கருணை உள்ளமும் பிறருக்கு உதவி செய்யும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு
விளம்பி ஆண்டு உங்களுக்கு பல சாதனைகளை வழங்க கூடிய ஆண்டாக அமைகிறது. உங்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இருந்து வந்த தடைகள் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். நீங்கள் போடுகின்ற திட்டங்களை கடின முயற்சியுடன் செயலாற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்துவந்த முரண்பாடுகள் விலகும் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிட்டும். உங்களை பொறுத்தவரையில் நல்லதொரு ஆண்டாகவே அமையும். தோல்வியை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியாக்கி கொள்ளவதில் உங்களுக்கு நிகர் நீங்களே நீங்கள் எடுக்கும் முடிவில் தெளிவாக இருப்பீர்கள். வெற்றி உங்களை தேடிவரும்.
அதிர்ஷ்ட திகதி- 3 , 9 ,5
அதிர்ஷ்ட கல் – மரகதம்
அதிர்ஷ்ட நிறம்- நீளம் , வெள்ளை , மஞ்சள்
—————————
4 ,13 , 22 ,31
இந்த வருடம் மகிழ்ச்சி தர கூடிய வருடமாக அமையும்.
திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்த வரம் கிடைக்கும். அதே நேரத்தில் தொழில் மாற்றங்கள் ஏற்படும். திடீர் அதிஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்களை நிறைவேற்றி கொள்ளலாம். வெளிநாட்டுக்கு முயற்சி செய்வது நல்லது. கல்வியை தொடர்வதும் நல்லது.
சிறிய செயலை கூட பெரிதாக பாராட்டும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கை நிறைந்த ஆண்டாகவே உருவாகிறது. தைரியத்துடனும் விடாமுயற்சியுடன் முயற்சி செய்வது நல்லது.எதிர்பாராத உதவிகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திகதி -1 , 5
அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்.
அதிர்ஷ்ட நிறம் -மஞ்சள் ,பச்சை ,ஊதா
—————————
5 ,14 ,23
கலை ஆர்வமும், நண்பர்கள் இடத்தில் உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு. இந்த வருடம் சற்று சோதனை தரும் ஆண்டாக தான் இருக்கும். இருந்தாலும் கவலை படாதீர்கள். சோதனைக்கு பின் நிச்சயமாக வெற்றி உண்டு. எல்லா விதத்திலும் நிதானமாக இருக்க வேண்டிய காலம் இது. எடுக்கின்ற முயற்சிகளில் தெளிவுடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் தடைக்கு பின் நல்ல முடிவு வரும். பொறுமையுடனும் நடப்பது வரும் பிரச்சனையை தவிர்க்கலாம். மனதிற்கு நின்மதி கிட்டும். இறை நம்பிக்கையுடன் செயல் ஆற்றுங்கள். திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
அதிர்ஷ்ட தினம் -1 ,5 ,3 , 6
அதிர்ஷ்ட கல்- மாணிக்கம்.
அதிர்ஷ்டநிறம்- வெள்ளைசிகப்பு , நீளம் , பச்சை.
—————————
6 ,15 ,24
இந்த வருடம் வெற்றிகளை தரும் ஆண்டாக அமையும். இருந்து வந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த காரியங்களை விருத்தியாக்கி கொள்ளலாம். தொழில் ரீதியில் முடிவெடுப்பதில் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் சிக்கல்கள் வந்தாலும் நன்மையாகவே முடியும். விட்டு கொடுத்து செயற்படுவதால் நன்மைகள் பல கிடைக்கும். வீடு கட்டுவதற்காக திட்டம் போட்டவர்களுக்கு வாங்குவதற்கான சூழல் அமையும். அதே வேளை வீட்டை புதுபித்துக்கான வாய்ப்புகள் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயற்பட்டால் அதிக வெற்றிகளை பெறலாம்.
அதிர்ஷ்ட தினம் -1 ,3 ,5 ,6
அதிர்ஷ்ட கல் -வைதூரியம்
அதிர்ஷ்ட நிறம்- நீளம் , வெள்ளை ,இளம்பச்சை
—————————
7 ,16 ,25
பிறரின் துன்பங்களில் சேவை புரியும் மனப்பாங்கு உடையவர்கள். பிறரின் வாழ்க்கைக்கு மெழுகுவர்த்தியாக உழைக்கும் உங்களுக்கு இந்த வருடம் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். இது நாள் வரை உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வை காணப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் வாக்குக்கு மரியாதை கிட்டும். போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிறர் உங்களை புகழ்ந்து பாராட்டும் அளவிற்கு உங்கள் செயல் அமைந்து இருக்கும். இந்த வருடம் உங்களை பொறுத்தவரை பல மாற்றங்கள் நிகழும் வருடமாக அமையும். அதே நேரத்தில் நண்பர்கள் இடத்தில் கவனம் தேவை. அவசர முடிவால் ஒரு நல்ல முடிவை இழக்க நேரிட வேண்டி வரும். நிதானத்துடன் செயல் ஆற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்- 1 ,2 ,7
அதிர்ஷ்ட கல்- கோமேதகம்
அதிர்ஷ்ட நிறம் – நீளம் ,வெள்ளை ,ஊதா.
—————————
8 ,17 , 26
நேர்மை குணமும் தெய்வீக குணமும் கொண்ட உங்களுக்கு
இந்த வருடம் பல சிக்கல்களை தந்தாலும் வெற்றிகள் உருவாவதற்கு உறுதுணையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பிரச்சனைகளில் முகம் கொடுக்கும் சூழல் வரலாம். அரசாங்க ரீதியிலும் சில பிரச்சனைகள் வரலாம். எனவே செய்கிற காரியங்களை சிறப்பாக செய்வது நல்லது. திட்ட மீட்டு காரியங்களை செயலாற்றுங்கள். அதிக முயற்சியும் பொறுமையும் இருந்தால் செய்கிற காரியங்கள் நல்ல படியாக இருக்கும். இறை நம்பிக்கை தேவை
சற்று சோதனையான வருடம் இந்த வருடம் .
அதிர்ஷ்ட எண் -1 ,5 ,2
அதிர்ஷ்ட கல் -நீலம்
அதிர்ஷ்ட நிறம்- இளஞ்சிவப்பு ,மஞ்சள் ,வெள்ளை
—————————
9 ,18 , 27
விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு ஒரு நல்லதோர் ஆண்டாக அமையும். இது நாள் வரை இருந்த கவலைகள் மறைவதற்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் போடுகின்ற திட்டங்கள் பெரும் வெற்றியை தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வரும் சவால்களை தைரியமாய் எதிர்கொள்ளுவீர்கள் .வெற்றிகளையும் காண்பீர்கள். இவ் வருடம் புதிய தொழில்கள் பதவி உயர்வுகளை எதிர் பார்த்தவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும். வண்டி வாகனம் வீடு மனை யோகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி -1 , 10 ,19 ,28
அதிர்ஷ்ட கல் -வைரம்
அதிர்ஷ்ட நிறம் -வெள்ளை ,செம்மஞ்சள் ,சிவப்பு
பகிரவும்...