மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை திரைப்படமாகிறது
புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
பாடல் எழுதுவது இசையமைப்பது அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அந்தவகையில் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை கதை சினிமா திரைப்படமாக தயாராகிறது. இதற்கான உரிமையை போஹெமிய ராப்சோடி படத்தை தயாரித்த கிராஹாம் கிங் வாங்கியுள்ளது.
படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார்.
கிளாடியேட்டர், ஹூஹோ ஆகிய படங்களுக்கு கதை எழுதிய ஜான் லோகன், மைக்கேல் ஜாக்சன் படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளது.
பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அதேநேரம் சமூக சேவையிலும் ஈடுபட்டார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். எனினும் 2009 இல் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.