மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்:ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரசாரத்தின் போது மத ரீதியில் உரையாற்றியதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என மாயாவதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது