Main Menu

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து ஆளுநர்  கொண்டார்.

கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர மக்களுக்கு உதவி புரிய வேண்டுமெனவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...
0Shares