Day: June 24, 2019
அவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி! – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சிலிக்கு சுற்றுலா சென்ற கனேடியர் கொலை!

சிலிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற Peter Winterburn என்ற கனேடியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். Peter Winterburn என்ற கனேடியர் தனது குடும்பத்தினருடன் சிலியின் துறைமுகப் பகுதியான வல்பரைஸோ (Valparaiso) நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் அவரின் பொருட்களைமேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதிமேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி

வங்காள தேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நைப் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ்,மேலும் படிக்க...
ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்!

ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய சில வினாடிகளில் விமானங்கள் கட்டுப்பாட்டினைமேலும் படிக்க...
எத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்

எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால்மேலும் படிக்க...
பயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்!

ஏர் கனடா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஃப்பானி ஆடம்ஸ் என்ற அந்த பெண்மணி, அண்மையில் கனடாவின் க்யூபெக் நகரிலிருந்து டொரண்டோ நகருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது ஆழ்ந்த தூக்கத்திலிருந்தமேலும் படிக்க...
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்!

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் சம்பளத்தொகையாக பேசப்படுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் 13ம் ஆண்டில் காலடிமேலும் படிக்க...
பெண்களை மானபங்கப் படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

பெண்களை மானபங்கம் படுத்துவோரை நடுரோட்டில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவதுதான் ஒரே தீர்வு என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார். நடிகை விஜயசாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்னை யாராவது அவதூறாக பேசினால் முதலில்மேலும் படிக்க...
இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து

சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். திண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல்மேலும் படிக்க...
தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில்மேலும் படிக்க...
அடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்

அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலின் ஊடாக நாட்டின் எல்லாமேலும் படிக்க...
நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும்

தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் ஒழுக்கம் ஒன்று நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (23) கண்டி, கெட்டம்போ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்மேலும் படிக்க...
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறுமேலும் படிக்க...
நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்

எதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், வடமாகணத்தைச் சேர்ந்த தவறவிடப்பட்ட 172 தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று முதல் தொடக்கம் தொடர் உணவுமேலும் படிக்க...