முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர் , கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும்.
நோயாளர்கள் வசதி கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. அத் தொலைபேசி இலக்கங்கள் கீழ் தரப்பட்டுள்ளது.
1) 021 222 2268
2) 021 315 2921
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்
3) 021 221 4249
4) 021 222 2261
5) 021 222 3348
நோயாளர்களை பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.