Main Menu

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் எல்லாமே எனக்கு தெரியும் – சரத் பொன்சேகா

2015 க்கு முந்தைய ஆட்சியின் போது ஒரு வெள்ளை வேன் கலாச்சாரம் இருந்தது, அது குறித்து தனக்கு அதிகம் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளை வேன் கடத்தலுக்கு முகம்கொடுத்தவர்கள், முகம்கொடுத்த விதம், வெள்ளை வேன் பயங்கரவாதம் எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்த தகவல் தன்னிடம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அன்றைய அரசாங்கத்தில் இருந்த மிக உயர்ந்த அதிகாரிகள் தான் பொறுப்பு கூறவேண்டும் என பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளை வேன் கலாச்சாரம் குறித்து தான் நன்கு அறிந்தவர் என்றும் அதன் விளைவுகள் குறித்தும் தான் அறிந்தவர் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெள்ளை வேன் சாரதிகள் என கூறும் இருவருடன் இணைத்து ராஜித சேனாரத்ன நடத்திய ஊடக சந்திப்பு மற்றும் ஊடக சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அதற்கு முதல் கேட்டதில்லை எனவும், அது தொடர்பாக எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அது தொடர்பாக எவ்வித கருத்தும் வெளியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.