மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் சபையில் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய, இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவாக அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் இதற்கு மரணதண்டனை வழங்குவது சிறந்த தீர்மானம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது மனிதாபிமானத்தை கருத்திற்கொள்ளாது வழங்கப்படும் தண்டனை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.