Sat. Apr 20th, 2019

மடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்

மடிக்கக்கூடிய கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் முன்னணி கைப்பேசி வடிமைப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் Xiaomi நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசியினை உருவாக்கியுள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் Xiaomi Mi Fold எனும் குறித்த மடிக்கக்கூடிய அன்ரோயிட் கைப்பேசி எப்போது அறிமுகம் செய்யப்படும் எனும் தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: