Main Menu

தொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்

இன்று உலக அளவில் ஏராளமானவர்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தி வருதால் பல பக்க விளைவுகள் உண்டாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் இக்கதிர் ஈர்ப்புக்களின் வீரியத்தை குறைத்து பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகள் காணப்படுகின்றது.

அவ்வகையில், வயர்லெஸ் முறையிலான ஹெட்போன்களை பயன்படுத்துவதால் கதிர்ப்பு அதிகரிக்கும். எனவே வயர் இணைக்கப்பட்ட ஹெட்போன்களை பயன்படுத்துவது கட்டாயமாகும்.

அதேபோன்று கைப்பேசிகளுக்கு பயன்படுத்தும் கவர்களை கதிர்ப்பு எதிர்ப்புள்ளதாக பயன்படுத்த முடியும். அத்துடன் சட்டைப் பைகளில் கைப்பேசியை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறான செயற்பாடுகளால் கதிர்ப்பினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கமுடியும்.

இவற்றை விட கைப்பேசிக்கான சமிக்ஞை குறைவாக காணப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலமும் கதிர்ப்பு தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பகிரவும்...