மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மிகவும் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாகப் பூரணை தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடிய நாட்டில், இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், தங்கல்ல – கால்டன் மகிந்த ராஜபக்ஷ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்துக்கு அச்சமடையாமல், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.