பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தினகரன் இன்று சசிகலாவை சந்தித்தார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு சசிகலாவை சந்திப்பது இதுவே முதன் முறையாகும். அவரிடம் வாழ்த்து பெற்றார். கட்சி தேர்தல் கமிஷன் பதிவு குறித்து அவரிடம் விளக்கி பேசினார். 18 எம்.எல்.ஏ.தொகுதி இடைதேர்தல் மற்றும் 38 எம்.பி. தொகுதிகள் வேட்பாளர்கள் நிறுத்தியது குறித்தும் பேசினார்.
வருகிற 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவித்தது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் சசிகலாவிடம் பேசினார்.