பிரேஸில் – சீனா இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் ஏவப்பட்டது
பிரேஸில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேஸிலின் அமேசான் காடுகளையும் நாட்டின் சுற்றுச் சூழலையும் கண்காணிக்கும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் வலையமைப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இந்த செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டுள்ளது.