Main Menu

கூகுள் நிறுவனத்திற்கு 15 கோடி யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் அரசாங்கம்!

இணையதள விளம்பரத் துறையில் தனது மேலாதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 15 கோடி யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூகுள் விளம்பர தொழில்நுட்பங்கள் சிக்கலாகவும், புரிந்து கொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், விளம்பரங்களை வெளியிடுவதற்கான தனது நெறிமுறைகள் குறித்து கூகுள் நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்...